×

அரசியல் இன்னிங்ஸை துவக்கிய கவுதம் காம்பீர் : மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர், மத்திய அமைச்சர்கள்கள் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீ பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது பாரதிய ஜனதாவில் இணைந்துள்ள காம்பீருக்கு விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக காம்பீர் அறிவித்தார். தற்போது அவர் வர்ணனையாளர் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் தான் கவுதம் காம்பீருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்தினர். கட்சியில் இணைந்த காம்பீருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். பின்னர்  பேசிய காம்பீர், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாக கூறினார். பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார். முன்னதாக இந்த மாதத் துவக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பாஜகவில் இணைந்தார். ற்போது பாஜகவில் கம்பீரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gautam Gambhir ,innings ,Union Ministers ,BJP , Gautam Gambhir, cricket veer, BJP
× RELATED கிரிக்கெட் பணி பொறுப்புகள்...