×

கோடை துவங்கியதால் இளநீருக்கு படு கிராக்கி : வருசநாடு விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: கோடை துவங்கியுள்ளதால் வருசநாடு இளநீருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வருசநாடு பகுதியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய் விலை குறைந்து வருவதால் தற்போது இளநீர் பருகும் பணியில் விவசாயிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இளநீர் ஒன்று விலை ரூபாய் 19 லிருந்து 20 ரூபாய் வரை விலை போகிறது. இதனால் தேனி, ஆண்டிபட்டி, கம்பம் ,குமுளி, திண்டுக்கல், மதுரை ,சென்னை போன்ற நகரங்களுக்கு இளநீர் லாரிகளில் ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் விவசாய நிலங்களுக்கு வந்து நேரடியாக இளநீரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மராஜபுரம் விவசாயி மணிமாறன் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே தேங்காய் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது கிடுகிடு என குறைந்துவிட்டது இந்நிலையில் இளநீருக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. இதனால் இளநீர் பறிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளோம் மேலும் சித்திரை மாதம் கோடை அதிகரிக்கும் காலங்களில் இளநீரின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : peasants , Summer, coconut,varusanaadu, farmers
× RELATED வேளாண் பொருட்கள் இறக்குமதியால்...