×

தேர்தல் புகாரளிப்பதற்காக உருவாக்கிய சிவிஜில் ஆப்பை டிக்டாக்காக மாற்றிய செல்பி பிள்ளைகள்

பஞ்சாப்பில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கான சி விஜில் ஆப்பில் பொதுமக்கள் தேவையற்ற செல்பிக்கள், அற்பமான புகைப்படங்களை பதிவு செய்வதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும், இதுகுறித்து பொதுமக்கள் புகாரளிக்கும் வகையிலும்  சி-விஜில் என்ற புதிய ஆப்பை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கேமரா வசதியுள்ள எந்த வகையான போனில் இருந்தும் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வேட்பாளர்களின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த போட்டோ, வீடியோக்களுடன்  இந்த ஆப்பில் புகாரளித்தால் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாப்பில் சி-விஜில் ஆப் மூலமாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு 60 சதவீதம் அற்பமான புகார்கள் வந்துள்ளது. இதுவரை பெறப்பட்ட 204 புகார்களில் 119 புகார்கள் அற்பமானவை என தெரியவந்துள்ளது.
 
இதுகுறித்து தேர்தல் தலைமை அதிகாரி கூறுகையில், “119 புகார்களில் செல்பிக்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஸ்கீரின் கீ போர்டு, மரங்கள், விளக்குகள், போர்வைகள் உள்ளிட்ட சம்பந்தமில்லாத படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்ற பயனற்ற புகைப்படங்களை மக்கள் பதிவிட்டுள்ளனர். அதே நேரத்தில் பஞ்சாப் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 85 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வேட்பாளர்களின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தொடர்பானவை. சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றில் வாகனத்தில் மதுவை மாற்றுவது குறித்த புகாரும் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை மட்டும் பதிவிடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,CVG , Election Complaint, Sivig in Abhijit, Selby Children
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...