×

தம்பி கட்சியில் அண்ணனுக்கு ‘சீட்’

ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண், தனது சகோதரரும் நடிகருமான நாகபாபுவை நேற்று ஜனசேனா  கட்சியில் இணைத்துக் கொண்டார். பின்னர், பவன் கல்யாண்  நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் அனுபவம் உள்ள நாகபாபு, மக்களுக்கான சேவை செய்ய தேவை என்ற நோக்கில், அவரை தற்போது கட்சியில் இணைத்து கொண்டேன்.  குடும்ப உறுப்பினர்களை நான் பின்வாசல் வழியாக கட்சிக்கு அழைத்து வராமல், நேரடியாக மக்கள் மத்தியில் களமிறக்குகிறேன். போட்டியிடுவதற்காக அவரை நிறுத்துகிறேன். மக்கள் தீர்ப்பை ஏற்பதற்காக அவரை அரசியலுக்கு கொண்டு வருகிறேன். அவரை மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மக்களவை தொகுதி  வேட்பாளராக ஜனசேனா கட்சி சார்பில் நிறுத்துகிறேன் என்றார். இதைத்தொடர்ந்து, நாகபாபு கூறியதாவது:

எனது தம்பியின் அழைப்பை ஏற்று நான் கட்சியில் சேர்ந்து உள்ளேன். அனைத்தையும் ஆலோசித்துவிட்டு தான் கட்சியில் இணைந்து உள்ளேன். எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சியின் தலைவராக உள்ள பவன் கல்யாண், கட்சி அலுவலக பணிகளை செய்யச் சொன்னாலும், அதனை செய்யும் சிந்தனையுடனே கட்சியில் இணைந்தேன். தற்போது எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார். அதனை கட்டாயம் காப்பாற்றுவேன். நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜாராஜ்யம் கட்சியில் மிகவும் முனைப்புடன் செயல்பட்ட நடிகர் நாகபாபு, சிரஞ்சீவி அக்கட்சியை காங்கிரசுடன் இணைத்து கொண்டதால் அரசியலைவிட்டு விலகி இருந்தார். நாகபாபு தற்போது தனது இளைய சகோதரர் பவன் கல்யாணுடன் மீண்டும் அரசியலில் களம் இறங்கியிருப்பது சிரஞ்சீவி குடும்பத்தினர்  மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Brother ,party , Thambi Party, Annanang, 'Seed'
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...