×

தனித்தா...கூட்டணியா குழம்பித் தவிக்கும் சரத்குமார் தொடர்ந்து நீக்கப்படும் நிர்வாகிகள்


சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று சரத்குமார் அறிவித்தார். ஆனால் வேட்பாளர் பட்டியலை இதுவரை அவர் வெளியிடவில்லை. சரத்குமாரின் நடவடிக்கை கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் பலர் அவரது நடவடிக்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அவர்களை சரத்குமார் அதிரடியாக நீக்கி வருவது சமகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர் கிச்சா ரமேஷ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று முன்தினம் சரத்குமாரிடம் நான் பேசும்போது, நாம் தனித்துதான் போட்டியிடுகிறோம் என்று கூறினார். ஆனால் இன்றுவரை அவர் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. மாநில நிர்வாகிகள் சரத்குமாரை திசை திருப்ப முயல்கின்றனர். அவர்கள் சரத்குமாரை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். அது எங்களுக்கு பிடிக்கவில்லை.

குறிப்பாக சேவியர் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.4 லட்சம் முதல் 5லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டுதான் மாவட்ட பொறுப்பு போடுகிறார்கள். இது சரத்குமாருக்கு தெரியவில்லை. மாநில நிர்வாகிகள் பணத்தின் மீதுதான் குறியாக இருக்கிறார்கள். கட்சியை வளர்க்க அவர்கள் முயற்சி எடுக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 35 மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவேதான் நாங்கள் இந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை.   இதை கேள்விப்பட்டு சரத்குமார் எங்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டு வருகிறார். தனித்து நிற்பதாக கூறிவிட்டு இப்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள். இந்த விஷயத்தில் சரத்குமார் தனித்து முடிவெடுக்க வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coalition ,Confused Surat Kumar ,administrators , Surat Kumar
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்