×

அதிமுகவுக்கு எடுப்பார் கைப்பிள்ளையா? அவசியமே இல்லே; தேவையும் இல்லே.: கருணாஸ் பேட்டி

1.தேர்தல் பரபரப்பாக  இருக்கும் நேரத்தில், அதிமுக கூட உங்களை கணக்கில் வைக்காமல் விட்டுட்டாங்களே?
அவங்க கூப்பிட்டுகிட்டு தான் இருக்காங்க. இன்னும் இரண்டு கட்சியில் இருந்து கூட அழைப்பு வந்தது. முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவன் நான். எம்பி சீட் வாங்குற அளவுக்கு கட்டமைப்பு இருக்கா என்று கேட்பார்கள். கிருஷ்ணசாமிக்கு முதன் முதலில் சீட் வழங்கும் போது அவருக்கு என்ன கட்டமைப்பு இருக்கு என்று நான் திருப்பி கேட்பேன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி ஸ்டேண்ட்ட மாத்திக்கிற மாதிரியான அரசியல் எனக்கு தேவையில்லை. அவங்களுக்கு நான் எடுப்பார் கைப்பிள்ளையா இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

2.நடிகர் கார்த்திக்கிற்கு ெகாடுக்கும் முக்கியத்துவத்தை உங்களுக்கு அதிமுக கொடுக்கவில்லையே? எனது இடத்தில் கார்த்திக் இல்லை. அரசியலில் அவர் எப்படி இருந்திருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திலேயும் அரசியலில் என்ன மாதிரி ஸ்டேண்ட் எடுத்திருக்கிறார் என்பது தெரியும். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் அவரை பயன்படுத்துவது போலத்தான் அதிமுகவும் இப்போது பயன்படுத்துகிறது. . இது திருவிழா நேரத்தில் நடக்கும் கூத்து. திருவிழாவில் கடை போடுவதற்கு எப்படி போட்டி ஏற்படுமோ அப்படி தான் இது.

3.செல்வாக்கு குறைஞ்சதாலேதான், உங்காளால தொகுதி பக்கமே போக முடியலையாமே? எனது தொகுதிக்கு அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்பதையும் சொல்லிவிட்டேன். ஓபிஸ் பிரிந்த போது அவங்க என்னிடம் பிரச்னை பண்ணினாங்க. டிடிவிக்கு ஆதரவு கொடுத்தா எடப்பாடி குரூப் பிரச்னை பண்ணுகிறார்கள்.  இப்போது ரெண்டு பேருமே சேர்ந்துகிட்டாங்க. அவங்க ஏதாவது பண்ணிட்டு அப்பாவி மக்கள் மேல பழிய போட்டுவிடுவாங்க. என்னால சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஒதுங்கியிருக்கேன்.

4.இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பீங்க?. நான் இப்போது ஜெனிவாவில் இருக்கிறேன். இலங்கை இனப்படுகொலை பற்றி பேச வந்துள்ளேன். சென்னை திரும்பிய உடன் யாருக்கு ஆதரவு கொடுக்கப் போகிறேன் என்பதை தெரிவிப்பேன்



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,interview ,Karunas , AIADMK , Karunas
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...