×

புதுச்சேரி மக்களை தொகுதிக்கு போட்டியிட சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு போட்டியிடுவதற்காக சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார்.  புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் வைத்திலிங்கம் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து, வேட்புமனு  தாக்கலுக்கு வைத்திலிங்கம் தயாராகி உள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு புதுவை திரும்பிய சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று மதியம் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.    பின்னர் அவர், தனது அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

 காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குவதால் வைத்திலிங்கம் நேற்று தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்தார். அந்த கடிதத்தில், எனது சபாநாயகர் பதவியை 21ம்தேதி மதியம் முதல் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தை பெற்றுக்கொண்ட துணை சபாநாயகர், தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக நேற்று மாலை வைத்திலிங்கம் எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள முதல்வர் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பிரசாரத்தை துவக்கினார். வைத்திலிங்கம் இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Speaker ,resignation ,Puducherry , Speaker's resignation ,Puducherry,Vaithilingam
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...