சீனிவாச பிரசாத்துக்கு அன்புத்தொல்லை

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து வந்த சீனிவாச பிரசாத் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பின தலைவர்.  அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் பாஜ.வில் சேர்ந்தார். அவர் ஏற்கனவே 6 முறை வென்ற சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியில் தற்போது காங்கிரஸ் சார்பில் துருவநாராயண் எம்பியாக உள்ளார்.

3வது முறையாக அவர் இத்தொகுதியில் போட்டியிட இருப்பதாக  தெரிகிறது. இதனால் அங்கு பாஜ சார்பில் சிறந்த வேட்பாளர் சீனிவாச பிரசாத் தான் என்று பாஜ நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதால், கட்சி மேலிடமும் அதை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Srinivasa Prasad , Love for Srinivasa Prasad
× RELATED காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்