×

மூன்று நாட்களில் 48 பேர் மனு தாக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் 48 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாமக, தேமுதிக  வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கு 48 பேரும், சட்டமன்ற தொகுதிக்கு 8 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். அதேபோன்று, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக கூட்டணி வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர்கள் வருகிற 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இன்று முக்கிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதிபட கூறியுள்ளது. வேட்புமனு தாக்கல் முழுவதும் வீடியோ எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 26ம் தேதி கடைசி நாளாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,nominees , 48 petitions filed ,three days ,AIADMK alliance nominees today
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...