×

பாஜ வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே வெளியீடு எச்.ராஜா ஒரு முந்திரி கொட்டை : ஈவிகேஎஸ்.இளங்கோவன் கருத்து

சென்னை: பாஜக வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட்ட எச்.ராஜா ஒரு முந்திரி கொட்டை என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்பு நேற்று ஈவிகேஎஸ் ஆஜரானார். பின்னர் வெளியே ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி என் மீது மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார். அது திருச்சி நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. இதை நான் சந்திப்பேன். இந்த எடப்பாடி, டடுப்பாடிகளுக்கு எல்லாம் பயப்புடுகிறவன் நான் இல்லை. குறுக்கு விசாரணைக்கு வாய்ப்பு இருந்தால், முதலமைச்சரை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய தயாராக உள்ளேன்.

இதுபோல் வழக்குகளின் மூலம் முடக்கிவிடலாம் என்று நினைத்தால், என்னைப் போன்றவர்கள் மீது வழக்குகள் போட போட தான் வேகம் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக வழக்குகளை சந்திப்பேன். எந்த தொகுதியில் நிற்க வேண்டுமென்று மேலிடம் சொல்கிறதோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன். ஒருவேலை போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும் தமிழகம், புதுச்சேரி, ஈரோடு உட்பட 40 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுவடுவேன். எச்.ராஜா ஒரு முந்திரி கொட்டை, அதனால் தான் கட்சி அறிவிப்பதற்கு முன்பு அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். பார்ப்போம் கட்சி மேலிடம் அறிவிக்கும் போது அவர் பட்டியலில் இருக்கின்றாரா, அல்லது ஆட்டு பட்டியில் அடைபட போகிறார என்று. அதிமுகவினர் தோல்வி பயத்தில் மிரண்டு போய் உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎசும் அதிமுகவில் இருந்து வெளியே வருவார்கள். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,release ,H. Raja ,EVVS Lalangovan , BJP candidate list, Preliminary release ,H. Raja
× RELATED அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் எச்.ராஜா உட்பட பாஜவினர் 133 பேர் கைது