×

‘நான்தான் வேட்பாளர்... நான்தான் வேட்பாளர், எனக்கு ஓட்டு போடுங்க...’ எச்.ராஜா தமாசு

சிவகங்கை மக்களவை தொகுதி  வேட்பாளராக எச்.ராஜாவை கட்சி தலைமை அறிவிக்காத நிலையில் நேற்று புதுக்கோட்டையில், நான்தான் பா.ஜ.க. வேட்பாளர் என்று  வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணியில் ஆளுங்கட்சி, தேமுதிக, பா.ம.க. உள்ளிட்டவை வேட்பாளர்களை அறிவித்து விட்டன. பா.ஜ.க. சார்பில் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் நேற்று மாலைதான் அறிவித்தனர். புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காலையில் நடைபெற்றது. இதில், திருச்சி அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டார். பா.ஜ.க. சார்பில் எச்.ராஜாவும் கலந்து கொண்டார். ``சிவகங்கை தொகுதியில் நான்தான் பா.ஜ.க. வேட்பாளர்; நான் வெற்றி பெற்றால் மக்கள் ராஜாவாக இருப்பார்கள் என்றும், இதுவரையில் சிதம்பரம்  ராஜாவாக இருந்தார் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.

கூட்டணி கட்சியினர்,``இன்னும் இவரை வேட்பாளராகவே கட்சி தலைமை அறிவிக்கவில்லை. அதற்குள், நான்தான் வேட்பாளர் என்று நம்மிடமே பேசுகிறாரே’’ என்று கிண்டல் அடித்தனர். பின்னர், அவர் கூறியதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் திருச்சி தொகுதி வேட்பாளர் இளங்கோவனுடன் வாக்கு சேகரிக்க கிளம்பினர். அப்போதும், எச்.ராஜா, ``நான்தான் வேட்பாளர்.. நான்தான் வேட்பாளர்...’’ என்றுகூறி தனக்காக வாலன்டியராக வாக்கு சேகரித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,H.Raja , I am the candidate, vote for me,'H.Raja
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...