×

எம்பி போகட்டும்... மேயர் சீட் தர்றோம்

மதுரை மக்களவை தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்பியும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான கோபாலகிருஷ்ணன், மீண்டும் சீட் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தார். இதற்காக தான் செய்த பணிகளை எல்லாம் பட்டியலிட்டு விளம்பரமும் செய்திருந்தார். ஓபிஎஸ்சிடமும் ‘பிட்’டை போட்டு வைத்திருந்தார். இவரது பெயரையும் கட்சித்தலைமை பரிசீலித்து உத்தேச பட்டியலில் வைத்திருந்தது. அறிவிப்பு வெளியாக வேண்டியதுதான் பாக்கி என்ற நிலையில், கடைசி நிமிடத்தில் இவரது சீட் பறிபோனது. எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யனுக்கு சீட் வழங்கியது அதிமுக தலைமை. இதனால் மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் சென்னையிலேயே முகாமிட்டு, மதுரை வேட்பாளர் பெயரை மாற்றக்கோரி மன்றாடினாராம். அப்போது அவரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ சந்தித்து சமரசப்படுத்தியுள்ளனர்.

சமரசமாகாத கோபாலகிருஷ்ணனிடம், `‘துணை மேயராகவும், அடுத்து எம்பியாகவும் இருந்து விட்டீர்கள். இப்போது சீட் கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். அடுத்த மாநகராட்சி தேர்தல் நடக்கும்போது மேயர் சீட்டுக்கு நாங்கள் போட்டிக்கு வர மாட்டோம். நீங்களே இருக்கலாம்,’’’ என்று ஆசை வார்த்தை கூறினார்களாம். அதற்கு அவர், ‘‘நீங்கள் எனக்குக் கிடைக்க வேண்டியதை தட்டிப்பறித்து விட்டு, என்னை ஏமாற்றி விட்டீர்கள். மேயர் சீட் என்ன வீட்டு வாசல்ல காத்துக்கிட்டா இருக்கு? உங்களுக்கு எந்தப் பின்னணி இருக்கிறதோ, அதே பின்னணி எனக்கும் இருக்கிறது’’ என்று கோபத்தைக் கொட்டினாராம். இருதரப்பினரிடையே இப்படியொரு வாக்குவாதம் நடந்தது இப்போது வெளிவந்து, மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MB ,mayor , Let's go to the MB ,mayor's seat
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!