×

ஹேக்கர்களால் முடக்கப்பட்டு பல நாட்களாகியும் இன்னும் செயல்படாத பாஜக இணையதளம்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bjp.org முடக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராததால் அக்கட்சி தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரை நடத்தி வரும் நிலையில் பாஜக இணையதளம் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கி ஹேக்கர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், சாதனைகள் என அந்த இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

முடக்கப்பட்ட பாஜக இணையதளத்தில் பதிவிடப்பட்ட தகவல்களை அப்படியே திரும்ப பெறும் முயற்சியில் சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக இணையதளம் முடக்கப்பட்டதற்கு இதுவரை எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. எனினும் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகப்பில், இடையூறுக்கு வருந்துகிறோம். பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாவலர்கள் என கூறிக் கொள்ளும் பாஜகவினர் தங்களது சொந்த இணையதளத்தையே பாதுகாக்க முடியவில்லை. இதில் பாஜக எங்கிருந்து இந்தியாவை பாதுகாக்கும் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதேபோல், தேசதந்தை காந்தியை விமர்சித்த இந்து மகாசபாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை சில வாரங்களுக்கு முன்பு ஹேக்கர்கள் முடக்கியது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,hackers , Bharatiya Janata Party, official website, volunteers worry, hackers
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...