×

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

மதுரை : 2007ல் மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும் 7 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி


கடந்த 2007ம் ஆண்டு மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தினகரன் அலுவலக ஊழியர்கள்  கோபிநாத், வினோத் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

9 பேருக்கு ஆயுள் தண்டனை


இதனை எதிர்த்து சிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய 17 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 மாதத்தில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Dinakaran ,persons ,newspaper office , Life sentence, CBI, high court Madurai branch, Dinakaran.
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...