×

சென்னையில் களைகட்டிய ஹோலி : வட இந்தியர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: ஹோலி என்றால் வண்ணம், ஹோலி என்றால் உற்சாகம் வட மாநிலங்களில் மதுரா, வாரணாசி போன்ற இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. நாடு முழுவதும் வெகுவிமரிசையாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இதில் சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள், மற்றும் ஆடல் பாடல்கள் லாத் மார்க் ஹோலி எனப்படும் தடியால் ஆண்களை பெண்களின் கும்மி நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகளால் பண்டிகையின் உற்சாகத்தில் மக்கள் திளைக்கின்றனர்.

ஹோலிகா எனும் அரக்கி தீயில் அழிந்த புராணத்தை நினைவு கூறும் வகையிலும், கோடை காலத்தை வரவேற்கும் வகையிலும் ஹோலி கொண்டாடப்படுகிறது. நேற்றே வட மாநிலங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்ட நிலையில், வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியான சென்னை செளகார்பேட்டையில் இன்று ஹோலி உற்சாகத்துடன் தொடங்கியது.ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டம் பாட்டம் என உற்சாகம் கரைபுரண்டோடியது.

சென்னையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் சவுகார்பேட்டை, யானைக்கவுனி, வேப்பேரி, புரசைவாக்கம் போன்ற இடங்களில் ஹோலி பண்டிகை உற்சாகம் கரை புரண்டு ஓடியது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை வயது வித்தியாசமின்றி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும், தண்ணீரில் வண்ண நிறங்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,North Indians , Holi, enthusiasm, North Indians, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...