×

சின்னமே ஒதுக்கல... அமமுகவினரை கலாய்த்த பொதுமக்கள்

அமமுக சார்பில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக தாம்பரம் நாராயணன் என்பவரை டி.டி.வி., தினகரன் அறிவித்துள்ளார். நேற்று காலை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களை நேரில் சந்தித்து தாம்பரம் நாராயணன் வாக்கு சேகரித்தார்.அப்போது, அமமுகவினரிடம் பொதுமக்கள் ‘சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று இருக்கும்போது நீங்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது’ என கலாய்த்தனர்.


அமைச்சர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே அதிமுகவில் சீட்: அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன்
1 அமைச்சர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே அதிமுகவில் சீட் வழங்கப்படுகிறதா? மற்ற கட்சிகளில்தான் இதுபோன்று வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிமுகவும் அதுபோல மாறிவிட்டது.

2 உண்மையான தொண்டர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படுகிறதா? தலைவர்கள் வாரிகளுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்ததால் உண்மையான தொண்டகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்.

3 பாஜவின் அடிமையாக இருக்கிறதா அதிமுக ? இது தவறான குற்றச்சாட்டு. பாஜ தனிக்கட்சி அதிமுக தனிக் கட்சி

4 விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் திட்டம் உண்டா? அதிமுகவை எதிர்த்து விளாத்திகுளம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளேன்.

தங்கம்  பிடிவாதம் டிடிவி குழப்பம்

தேனி மக்களவை வேட்பாளராக அதிமுக சார்பில் துணை முதல்வரின் மகன் நிற்பதால், ஆண்டிப்பட்டியில் பதவியை இழந்த தங்க தமிழ்செல்வனை நிறுத்த வேண்டும் என்று டிடிவி விரும்புகிறாராம். ஆனால் இதற்கு தங்க தமிழ்செல்வன் மறுத்து வருகிறாராம். சட்டப்பேரவைக்கே போட்டி போடுகிறேன் என்று கூறிவிட்டாராம். இதனால் யாரை நிறுத்துவது என்ற குழப்பத்தில் தினகரன் இருக்கிறாராம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Citizens ,civilians , அமமுக,பொதுமக்கள்
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...