×

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சாமியார் விடுவிப்பு

பஞ்ச்குலா: இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 4 பேரை நீதிமன்றம் விடுவித்தது. கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி, பஞ்சாபில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் அரியானா மாநிலம் பானிபட் அருகே வந்தபோது இரண்டு பெட்டிகளில் குண்டு வெடித்தது. இதில் 68 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தியதில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சுனில் ஜோசி 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். நான்கு பேர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மீதமுள்ள 3 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த தேசிய புலனாய்வு அமைப்பின் நீதிபதி ஜக்தீப் சிங், போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டுள்ள அசீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜிந்தர் சவுத்ரி ஆகியோரை விடுவிப்பதாக கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sariyar ,Samjhauta , சம்ஜவுதா ரயில் ,குண்டுவெடிப்பு , சாமியார்
× RELATED திருவண்ணாமலையில் மூக்குப்பொடி...