×

பொள்ளாச்சி சம்பவத்தில் நடவடிக்கை இல்லையா? ஓபிஎஸ்சை வழிமறித்து மாணவி சரமாரி கேள்வி: மதுரையில் பரபரப்பு

மதுரை: தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத்குமாருடன் நேற்று காலை 9 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது சாலையில் நடந்து வந்த ஓபிஎஸ்சை பார்த்து 2 மாணவிகள் திடீரென அருகில் சென்றனர். அவரிடம், ‘‘சார் கொஞ்சம் நில்லுங்க’’ என்றனர். அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே அருகில் வந்த ஓபிஎஸ், ‘‘என்னம்மா நல்லா படிங்க பரீட்சைக்கு போறீங்களா?’’ என்று  கேட்டார். அதற்கு ஒரு மாணவி, ‘‘ஆமா சார்... என்னை போன்ற மகள் இல்லையா உங்களுக்கு?’’ என்று கேட்டார்.

இதை கேட்டு, ‘ஏன்மா?’ என்று ஷாக் ஆனவாறு ஓபிஎஸ் கேட்டார். அதற்கு ஒரு மாணவி, ‘‘பொள்ளாச்சியில் என்னை போன்ற மாணவிகளை சீரழிச்சிருக்கிறாங்க. கடந்த 7 வருசமா நடந்ததாக சொல்றாங்க. போன வருடம் புகார் கொடுத்தும் அதை நீங்கள் கண்டுகொள்ளாதது ஏன்? உங்க கட்சிக்காரர்களே குற்றவாளியாக இருப்பதாலா? அப்ப கட்சிதான் உங்களுக்கு முக்கியமா? மக்கள் இல்லையா? உங்களிடம் தானே நாட்டை ஒப்படைத்திருக்கிறோம். பதில் சொல்லிட்டு போங்க சார். எங்க அப்பாவும் உங்க கட்சிதான். எங்க வீட்டில் கூட அம்மா படம்தான் இருக்கு’’ என்று அடுத்தடுத்து கேள்விக்கணையால் குடைந்தெடுத்தார். அதற்கு ஓ.பி.எஸ், ‘‘வணக்கம்மா நீ சொல்றது சரிதான். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. தைரியமாக வந்து கேள்வி கேட்கிற பாரு இதுதான் ஜனநாயகம்... உன் தைரியத்தை பாராட்டுகிறேன்’’ என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,Student Saramari ,questioning ,Ottas , Pollachi, is not it? Opies, student, Madurai
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!