×

அமமுக மாவட்ட செயலாளர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய டிடிவி தினகரன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக, அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனை அறிவித்தார்.கிருஷ்ணகிரி தொகுதியில் அமமுக வேட்பாளராக ரவிச்சந்திரன் அறிவிக்கப்படுவார் என தொண்டர்கள்  எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ரவிச்சந்திரன் திடீரென  மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளார். இதனால், கிருஷ்ணகிரி தொகுதியில் அமமுக வேட்பாளராக யாரை நிறுத்துவார்கள் என தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ரவிச்சந்திரன் அதிமுகவில் சேர்ந்ததை அடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அமமுக செயலாளராக மத்தூர் கணேசகுமார்  நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amma District Secretary ,DMK , AmmK District Secretary ,joined the ADMK
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி