×

ஜெகன்மோகன் சித்தப்பா படுகொலை எதிரொலி ஆந்திரா அரசியலில் திருப்புமுனை சூறாவளி

மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி கடந்த 15ம் தேதி புலிவெந்துலாவில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது சித்தப்பா படுகொலை பின்னணியில் ஆளும் தெலுங்குதேசம் இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது சந்திரபாபுவுக்கு அதிர்ச்சியை தந்தது  என்பதை விட, ஆந்திர அரசியலில் புதிய சூறாவளியாக உருவெடுத்துள்ளது.  நாயுடு எப்போது எல்லாம் ஆட்சியில் இருக்கிறாரோ அப்போது எல்லாம் எங்களது குடும்பத்தில் கொலை நடப்பது சகஜம் என்று ஜெகன் மோகன் குற்றஞ்சாட்டினார். அறையில் சிந்தியிருந்த ரத்தக் கறையை எல்லாம் அவரது குடும்பத்தினர் அழித்து விட்டனர். இதனால், தடயங்கள் சேகரிக்க முடியவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பதிலுக்கு குற்றம்சாட்டினார். கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு இதுவரையில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது. தலைமறைவாக இருந்த ரெட்டியின் நெருங்கிய நண்பரான பரமேஸ்வரா ரெட்டியை திருப்பதியில் ஒரு மருத்துவமனையில் போலீசார் கைது செய்தனர்.

தனது கணவர் கைது செய்யப்பட்டது குறித்து பரமேஸ்வரா ரெட்டியின் மனைவி கூறுகையில், ‘‘ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டி எனது கணவரை இந்த வழக்கில் சிக்கவைத்துள்ளனர்’’ என்று கூறியுள்ளார். இதனிடையே, ராயசோட்டியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார். “அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எந்த அளவிற்கும் செல்லக் கூடியவர்தான் சந்திரபாபு நாயுடு. என் வளர்ச்சியை தடுப்பதற்கும் என்னை இழிவுபடுத்துவதற்கும், அவரது உத்தரவுபடி என் சித்தப்பா படுகொலை செய்யப்பட்டுள்ளார்’’ என்று சாடினார். மேலும், ‘‘சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ஸ்டைல் என்பது ‘கொலைகார அரசியல்’. இது எல்லாம் அவரிடம் உள்ள பணம், அதிகாரம், ஊடகம் பத்திரிகை செல்வாக்கு ஆகியவற்றினால் சாத்தியமாகிறது. இவற்றை எதிர்த்துதான் நாம் போராடி அரசியல் நடத்த வேண்டியுள்ளது. எந்த நிலையிலும் முறைகேடாக செயல்பட மாட்டோம்’’ என்றும் ஜெகன் ஆவேசமாக கூறினார்.

சர்ச்சை: ஏன்?... எதற்கு?...

* விவேகானந்த ரெட்டிக்கும் 30 ஆண்டுகால நண்பரான கங்கி ரெட்டிக்கும் பெங்களூருவில் உள்ள ரூ.125 கோடி மதிப்பு சொத்து விவகாரத்தில் கொலை நடந்ததா? என்ற சந்தேகத்தின் பேரில் கங்கி ரெட்டியிடமும் விசாரணை நடக்கிறது.
* ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கும் கடப்பா மாவட்டத்தை தெலுங்குதேசம் கட்சி கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் 2014ம் ஆண்டு முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுக்க சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jeganmohan Chittappa ,Echo ,Andhra ,hurricane , Jeganmohan, murder, Andhra, politics
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...