×

தேர்தலில் சீட் தராததால் பாஜ.வில் இருந்து 2 அமைச்சர், 6 எம்எல்ஏக்கள் உட்பட 25 பேர் விலகல்: வடகிழக்கு மாநிலங்களில் பாஜ.வுக்கு பின்னடைவு

அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 11ம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு 54 ெதாகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை சமீபத்தில் பாஜ வெளியிட்டது. இந்த பட்டியலில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் பலருக்கு கட்சி மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக, மாநில பொதுச் செயலாளர் ஜார்பும் காம்லின், மாநில உள்துறை அமைச்சர் குமார் வெய், சுற்றுலாத் துறை அமைச்சர் ஜார்கார் காம்லின் மற்றும் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 6 பேர் உட்பட பலர் பாஜவில் இருந்து விலகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். தேசிய மக்கள் கட்சி பாஜவுடன் இணைந்து, தான் மேகாலயாவில் ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜவுடன் கூட்டணி வைக்காமல் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சரான குமார் வெய் கூறுகையில், “தேர்தலுக்காக நாங்கள் போராடவில்லை. மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சியை அமைப்போம்” என்றார்.

பிஜேடியில் இருந்து எம்பி, எம்எல்ஏ ராஜினாமா
ஒடிசாவில் மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மேலும் ஒரு எம்பி, எம்எம்ஏ பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே நாபராங்பூர் எம்பி பாலபத்ரா மாஜ்ஹி, காளஹந்தி தொகுதி எம்பி அர்கா கேசரி தியோ ஆகியோர் தேர்தலில் வாய்ப்பு தராததால் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டனர். இந்நிலையில் கந்தமால் எம்பி பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங், தசபல்லா எம்எல்ஏ பூர்ண சந்திர நாயக் ஆகியோரும் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்குக்கு தனித்தனியாக ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ministers ,BSP ,BJP , BJP, election, MLA,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...