×

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிக்கு போட்டா போட்டி

கேரளாவில் இம்முறை 6 தொகுதிகளிலாவது வெற்றி பெறவேண்டும் என்று அமித்ஷா, மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் கொல்லம் ஆகிய தொகுதிகளைத்தான் பா.ஜ.க. குறிவைத்துள்ளது. இவற்றில் திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய தொகுதிகளில் தான் கூடுதல் வெற்றி வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. கருதுகிறது. இதில் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மிசோரம் கவர்னருமான கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

பத்தனம்திட்டா தொகுதிக்கு மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் மற்றும் மாநில பொது செயலாளர்களான சுரேந்திரன், ரமேஷ் ஆகியோர் போட்டி போடுகின்றனர். இவர்கள் 4 பேரும், ‘தங்களுக்கு தந்தால் பத்தனம்திட்டா தொகுதி, இல்லாவிட்டால் வேறு எந்த தொகுதியும் வேண்டாம்’ என்று பிடிவாதமாக இருப்பதால் இவர்களில் யாருக்கு இந்த தொகுதியை ஒதுக்குவது என தெரியாமல் பெரும் குழப்பம் நீடிக்கிறது. இந்த ஒரே ஒரு தொகுதியால் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் பாஜ.வால் இது வரை ஒரு தொகுதியில் கூட வேட்பாளரை அறிவிக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala, Amit Shah,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி