×

சுமித்ராவை வீழ்த்த சல்மான்கான்: மபி.யில் காங்கிரஸ் அதிரடி வியூகம்

கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேச சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதேபோல வரும் மக்களவை தேர்தலிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் கமல்நாத் தலைைமயிலான மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் வியூகங்களை வகுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 3 இடங்களை மட்டுமே பெற முடிந்த  காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை தேர்தல் வெற்றி எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜ பலம் வாய்ந்த மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக தொடர்ந்து 8வது முறையாக இந்தூர் தொகுதியை தன் கைவசம் வைத்திருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனை வீழ்த்த பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் இதுகுறித்து சல்மானிடம் பேசி வருவதாக மபி காங்கிரஸ் செய்திதொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதியும் இதை உறுதிபடுத்தியுள்ளார். இந்தூரில் உள்ள பலசியா பகுதியில் பிறந்து தனது குழந்தை பருவத்தை கழித்த சல்மானின் பிரச்சாரம், இந்தூர் தொகுதியை சுமித்தராவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி கைப்பற்ற உதவுமா என்பதை பார்ப்போம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salman Khan ,Sumitra ,Congress ,MB , Salman Khan, Sumitra, Congress,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...