×

‘பேஷியல்’ மூஞ்சி, ‘டை’ தலை நீங்க மோடிய பத்தி பேசுவதா?: மாயாவதி பற்றி பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

பிரதமர் மோடியை பற்றி மாயாவதி காட்டமான கருத்தை தெரிவித்திருந்தார். ‘மோடி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் பேசுவது எல்லாம், நான் டீ வித்தவன், நான் காவலாளி என்று இருக்கிறது. போன தேர்தலின்போது டீ விற்ற கதையை சொன்னார். இந்த தேர்தலுக்கு காவலாளி கதையை எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார். எளிய வாழ்க்கை வாழ்வதுபோல மக்களிடம் ஒரு தோற்றத்தை கொண்டுவர இப்படியெல்லாம் பேசுகிறார். ஓட்டுக்காக இந்த எளிய தோற்றத்தை சொல்லிக்கொள்கிறார். மக்களுக்கு இதெல்லாம் தெரியாமலா போகும்’ என கூறியிருந்தார். இதற்கு உ.பி. பாஜ எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

‘மோடியை பற்றி பேச மாயாவதிக்கு என்ன தகுதி இருக்கிறது. தூய உடைகளை அணிவது, ராஜபோக வாழ்க்கையை குறிக்காது. மாயாவதி செய்துக் கொண்டிருப்பதுதான் ராஜவாழ்க்கை. அவர் தினமும் பேஷியல் செய்துகொள்கிறார். 60 வயதாகிறது. முடியை தினமும் டை அடித்து கருகருக்க வைக்கிறார். இவரெல்லாம் மோடியை விமர்சிப்பதுதான் விந்தை’ என்று கூறியிருக்கிறார். மாயாவதியை பாஜ எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் இப்படி விமர்சித்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pashtun' Munji ,Modi ,BSP MLA ,Mayawati , Modi, BJP, MLA, Mayawati
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...