×

குறைந்த செலவில் எளிமையாக வாழ தகுந்த நகரங்களில் சென்னை இடம்பெற்றுள்ளது: சர்வே தகவல்

நியூயார்க்: உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 133 நகரங்களில், 150 பொருட்களின் விலை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு அதிக செலவு ஆகும் நகரங்கள் மற்றும் செலவு குறைந்த நகரங்கள் குறித்து வருடாந்திர சர்வே ஒன்று நடத்தப்பட்டது. இந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றில் பாரிஸ், சிங்கப்பூர், மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் மிகவும் காஸ்ட்லியான நகரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. சுவிசர்லாந்தின் சூரிச் நகரம் 4வது இடத்தையும், ஜப்பானின் ஒசாகா 5வது இடத்தையும் பிடித்துள்ளன. தென் கொரியாவின் தலைநகர் சியோல், டென்மார்க்கின் கோபன்ஹேகன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்கள் 7வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.

இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் 10வது இடத்தினை பெற்றுள்ளது. இந்நிலையில், குறைந்த செலவில் எளிமையாக வாழ தகுந்த நகரங்களில் வெனிசுலாவின் கராகஸ், சிரியாவின் டமாஸ்கஸ், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட், கஜகஸ்தானின் அல்மாட்டி, பாகிஸ்தானின் கராச்சி, நைஜீரியாவின் லாகோஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதேப்போல் இந்தியாவின் தலைநகர் டெல்லி, கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் மற்றும் தமிழகத்தின் தலைநகர் சென்னை ஆகிய நகரங்களும் குறைந்த அளவில் வாழ தகுந்த நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madras ,cities , Madras, place , most affordable cities,low cost, Survey Information
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு