×

பிரதமர் மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை : முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சனம்

அமராவதி : மிக முக்கிய பொறுப்புகளில் தலைவராக இருப்பவர்களுக்கு பல்வகை திறமைகள் வேண்டும் ஆனால், பிரதமர் நரேந்திர மோடியிடம் அதுபோன்ற திறமைகள் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். பலரும் நம்புவதுபோல மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை என அவர் கூறினார். ஒரு தலைவருக்கு ஆளுமை தகுதி இருந்தால் சிறந்த அறிவுத்திறன் கொண்டவரை மேலும் முன்னேற செய்ய வேண்டும், ஆனால் மோடி அவ்வாறு செய்வதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிகார வர்க்கங்கள், ஊடகங்கள், அரசியல், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைகளை அழிப்பவராக மோடி செயல்படுவதாகவும், இவ்வாறு தலைமை பண்புகளை அழித்தால் அது நாட்டிற்கே பேரழிவாகி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தன்னை நாட்டின் காவலன் என்று கூறிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் கையில்தான் சாவி இருந்தது. ஆனால் திருடர்களும், ஊழல்வாதிகளும் பணத்தை சுருட்ட அவரே அனுமதித்து விட்டார் என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் போன்று அடிக்கடி நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த வி‌ஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என கூறினார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்த நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று மோடி குற்றம் சாட்டினார், இப்போது மோடி ஆட்சியிலும் அதுதான் நடந்துள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வீடுகள், அலுவலகங்களில் பலமுறை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டது. நாங்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டதை தவிர என்ன தவறு செய்தோம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Chandrababu Naidu , Prime Minister Modi, Personality Eligibility, Chief Minister Chandrababu Naidu
× RELATED ஆந்திராவுக்கு வந்த முதலீடுகளை...