×

ஆண்டிபட்டி அருகே 8 எருமை மாடுகள் சுருண்டு விழுந்து சாவு : மக்கள் பீதி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் 8 எருமை மாடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து ஊராட்சி, அம்மாபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (42). எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று விவசாய நிலத்தில் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தின் தாள்களை எருமை மாடுகள் மேய்ந்தன. இதனால் எருமை மாடுகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 2 எருமை மாடுகள் இறந்துவிட்டன. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கினார்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி 6 மாடுகள் இறந்தன. கால்நடை மருத்துவ குழுவினர் இறந்த எருமை மாடுகளை பிரேத பரிசோதனை செய்து பின்பு புதைத்தனர். மேலும் 13 மாடுகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. சுப்புராஜ் கூறுகையில், ‘‘ஒரு எருமை மாட்டின் விலை ரூ.60 ஆயிரம் வீதம் 6 மாட்டின் விலை ரூ.3 லட்சத்து 60 ஆயிரம். ஒரு எருமை கன்றின் விலை ரூ.25 ஆயிரம் வீதம் 2 மாட்டின் விலை ரூ.50 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசு மீதம் உள்ள மாடுகளை உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும். இறந்த மாடுகளுக்காக நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : buffalo cows ,Andipatti , Andipati, buffalo, people
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...