×

அது அந்தக்காலம் எதிர்க்கட்சி வேட்பாளர் வீட்டிற்கே சென்று ஓட்டு கேட்ட ஓய்வறியா சூரியன்

தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர் கருணாநிதி. அரசியலில் சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர். அதிலும் தேர்தல் என்றால் தனி வேகம் இருக்கும். நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. அதன்பிறகு 1957 முதல் 2016 வரை நடந்த அனைத்து பொது, இடைத் தேர்தல்களிலும் கருணாநிதி சுற்றி சுழன்று வலம் வந்திருக்கிறார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கருணாநிதியின் ‘உடன் பிறப்புகளே’ ஒலித்திருக்கிறது. தமிழகத்தின் பல தொகுதிகளில் போட்டியிட்ட தலைவரும் கருணாநிதிதான். அதுமட்டுமல்ல களம் கண்ட அத்தனை முறையும் வெற்றியை சுவைத்திருக்கிறார். அப்படிதான் 1962ம் ஆண்டு தஞ்சாவூரில் போட்டியிட்டார் கருணாநிதி. அவரை எதிர்த்து நின்றவர்  பரிசுத்த நாடார். காங்கிரஸ்காரர். சென்னையில் இருந்து பிரசாரத்திற்காக தஞ்சாவூர் சென்றார் கருணாநிதி.

முதல்நாள் பிரசாரம். காலையில் கட்சிக்காரர்களுடன் நேராக காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வீட்டுக்கு போனார். ஆச்சர்யப்பட்டாலும் எதிர்கட்சிக்காரர் என்று எண்ணாமல் பரிசுத்த நாடாரும் இன்முகத்துடன் வரவேற்றுள்ளார்.  பின்னர் அவரிடம் , ‘உதய சூரியன்’ சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுள்ளார் கருணாநிதி. இதை எதிர்பார்க்காததால் திகைத்த பரிசுத்த நாடார் கொஞ்சம் நிதானித்து, ‘எங்கள் இரட்டை காளை’ சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டதாக சொல்கிறார்கள்.  எதிர்க்கட்சி வேட்பாளரிடம்  வாக்கு கேட்டு பிரசாரம் தொடங்கிய ஒரே தலைவர் கருணாநிதிதான் என்கிறார்கள். அப்படி தேர்தல் என்றால் ஓய்வறியா கருணாநிதி, இல்லாத முதல் பொதுத் தேர்தலை தமிழகம் சந்திக்க உள்ளது. அவர் இறந்ததால் காலியான திருவாரூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : opposition candidate ,home , A Resting Sun, Karunanidhi.
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு