×

போதிய பயணிகள் இல்லாததால் ஒரேநாளில் 6 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில்  பயணிகள் இல்லாததால் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு அந்தமான் செல்லும் விமானம்  போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், காலை 10.10 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இண்டியா விமானம் ரத்து செய்யப்பட்டது. அதோடு காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும்  ஏர் இண்டியா விமானமும் காலை 8.10 மணிக்கு  திருச்சியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இண்டியா விமானமும் ரத்து செய்யப்பட்டன. மேலும், காலை 9.40 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய  ஜெட்ஏர்வேஸ் விமானமும்  காலை 11.20 மணிக்கு  சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டன.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,flights , Not enough passengers, 6 flights canceled
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!