செயின்ட் ஜோசப் கல்லூரியில் மார்ச் 30ல் தேர்வு முகாம்

சென்னை: செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்களை சேர்ப்பதற்கான தேர்வு முகாம் மார்ச் 30ம் தேதி நடைபெற உள்ளது.இது குறித்து செயின்ட் ஜோசப்  பொறியியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவ, மாணவிகளை  சேர்த்து  வருகிறோம். அப்படி சேருபவர்களுக்கு கல்வி, உணவு, விடுதி கட்டணங்கள் இல்லை.

வரும் 2019-20  கல்வியாண்டில் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 150 பேரை சேர்க்க உள்ளோம்.  அதற்கான தேர்வு முகாம் மார்ச் 30ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.  தடகளம், ஹாக்கி,  கைப்பந்து, கபடி, சதுரங்கம்,  கால்பந்து உள்ளிட்ட விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் இந்த முகாமியில் பங்கேற்கலாம். அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி பிஈ/பிடெக் பிரிவுகளில் சேரும்போது +2வும், எம்ஈ/எம்டெக்/எம்பிஏ சேரும்போது  அதற்குரிய இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவலறிய செல்வகணபதி - 98409 86678,  சங்கர் - 99401 04882.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கிராண்ட்ஹோம் - நீஷம் ஜோடி போராட்டம்...