மகளிர் டென்னிஸ் தரவரிசை 24வது இடத்துக்கு முன்னேறினார் பியான்கா

நியூயார்க்: மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், பிஎன்பி பாரிபா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 18 வயது வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) 24வது இடத்துக்கு முன்னேறினார்.அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற பாரிபா ஓபனில் ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கிய பியான்கா, யாரும் எதிர்பாராத வகையில் முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்தி  சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இந்த வெற்றியால், உலக தரவரிசையில் 60வது இடத்தில் இருந்த அவர் ஒரேயடியாக 36 இடங்கள் முன்னேறி 24வது இடத்தை பிடித்தார். ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருந்த சிமோனா ஹாலெப் (ரோமானியா) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bianca , Women's ,tennis ,ranking Bianca,24th place
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு தலைக்கவசம்