×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாசுக்கு ஜாமீன் கிடைக்குமா? தீர்ப்பு 26க்கு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை 26ம் தேதிக்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். அல்அஜியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள இவர், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் முதல் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நவாஸ் உடல்நலமின்றி இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஜாமீன் வழங்க கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நவாஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து கடந்த பிப்ரவரி 25ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் சார்பில் கடந்த 6ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோஷா தலைமையிலான 3 பேர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் மனு தொடர்பாக தேசிய பொறுப்புைடமை அமைப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை மார்ச் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் மனு தொடர்பான தீர்ப்பை வழங்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nawaz ,Supreme Court , Prime Minister of Pakistan, Nawaz, bail, Supreme Court,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு