×

எங்கள குற்றஞ்சொல்றது இருக்கட்டும் 5 வருஷத்துல நீங்க என்ன சாதிச்சீங்க?: யோகிக்கு பிரியங்கா கேள்வி

படோகி: உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் மீது ஆளும் பாஜ அடிக்கடி  குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ெபாதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். கங்கையில் படகு பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி படோகி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். அப்போது அவரிடம் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் 2 ஆண்டு கால சாதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரியங்கா கூறியதாவது: யோகி ஆதித்யநாத் அரசின் முன்னேற்ற அறிக்கை சிறப்பானதாக உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் வேறாக உள்ளது. வளர்ச்சி நிலவரம் அறிய பாஜவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும். அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்ததற்கும் அதை நிறைவேற்றியதிலும் பெரிய வேறுபாடு காணப்படுகிறது.

70 ஆண்டுகளில் எந்த மேம்பாட்டு பணிகளும் நடைபெறவில்லை என கவலைப்பட்டு ஆவேசமாக குரல் எழுப்பும் நீங்கள் கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளீர்கள். இந்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? தினமும் நான் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசி வருகிறேன். மாணவர்கள், இளைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் ஆகியோரை சந்தித்து பேசியபோது தாங்கள் தினமும் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாவதாக தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் அரசு பணியாளர்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலர் சம்பளம் எதுவும் பெறவில்லை என தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்களுக்கு வெறும் 8 ஆயிரம் சம்பளமே வழங்கப்படுகிறது. இவ்வாறு பிரியங்கா தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Priyanka ,Yogi , Priyanka, Yogi
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்