×

கோவையில் சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல்

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மாட்டு வண்டியில் வந்து நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் 2 தொகுதிகள் உள்ளன. கோவையில் இருக்கக்கூடிய கும்பை மற்றும் பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கும் சேர்த்து 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது 10 நிமிடத்திற்கு முன்பாக பொள்ளாச்சி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுயேட்சை வேட்ப்பாளரான கோவை போத்தனுர் பகுதியை சேர்ந்த நூர்முகம்மது என்பவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏழ்மை நிலை அதிகரித்திருப்பதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவிவருவதாகவும் என அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த இரண்டு கருத்துக்களை மையமாக வைத்து கைவண்டியில் பெண்களை அமர வைத்து ரயில் நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கைவண்டியாக அந்த வண்டியை இழுத்து வந்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அந்த வண்டியை நிறுத்தி, அங்கிருந்து நடந்து சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் நூர்முகம்மது கடந்த 29 முறையும் நூதன முறையில்தான் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.  இந்த ஆண்டு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுதான் தனக்கு ஆதரவாக 5 பெண்களை உடன் அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். கைவண்டி இழுத்து வந்ததுக்கான காரணம் தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, அதனால் தான் வாகனத்தில் வராமல் இந்த கைவண்டியை இழுத்து வந்ததாக வேட்பாளர் நூர்முகமது தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,Coimbatore , Coimbatore, Independent, Candidate, Nomination, Method, Prediction
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...