×

பாஜகவுக்கு ஆதரவாக மக்களவைத் தேர்தலில் களம் காணும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி

குஜராத்: குஜராத்தில் ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா விருப்பம் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா ஜடேஜா கர்னிசேன அமைப்பின் மகளிரணி தலைவியாக உள்ளார்.இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.மேலும் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் களம் காண அவர் முடிவு செய்துள்ளார். குஜராத்தில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின்  பூனம் கடந்தமுறை இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர். இதே தொகுதியில் காங்கிரஸ் ஹர்திக் பட்டேலை களம் இறக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ravindra Jadeja ,Lok Sabha ,election ,BJP , In favor of BJP, Lok Sabha, election, field, watching, Ravindra Jadeja's wife
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...