×

வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் கண்களை கட்டி 12 மணி நேரம் தவில் வாசித்து சாதனை

பணகுடி: வடக்கன்குளம்  பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் தவில் வாசித்து சாதனை படைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டி  வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்களான 9ம் வகுப்பைச் சேர்ந்த சிவராம், நவீன், முத்துகுமார், ராம்குமார்,  தருண்செல்வம் உள்ளிட்ட 5 பேர், கோயில் வளாகத்தில் கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் தவில் வாசித்தது பக்தர்களை கவர்ந்தது.

இதுகுறித்து தவில் பயிற்றுநரும் பாலகிருஷ்ணா மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியருமான அப்துல் கலீம் கூறுகையில், ‘‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு இந்த சாதனையை சமர்ப்பிக்கும் விதமாக இதை பொது இடத்தில் நடத்த வேண்டும் என முடிவெடுத்தோம். தற்போது பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் ரசிக்கும் விதமாக மங்கல இசையை இசைக்கவும் உலக அமைதிக்காகவும் தொடர்ந்து 12 மணி நேரம் வாசிக்கவும் திட்டமிட்டு மாணவர்களுக்கு கண்களை மூடி வாசிக்க பயிற்சி கொடுக்கப்பட்டது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school students , Vadakankulam, Students,tavil
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...