×

பொன்னன்விடுதி ஊராட்சி மேட்டுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்விசீர்

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதி ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கல்விசீர் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை லதா தலைமை வகித்தார். பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பீரோ, விளையாட்டு பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். பொதுமக்களை தலைமை ஆசிரியை லதா தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் செல்லதுரை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உமா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் மற்றும் பள்ளி ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். பொன்னன்விடுதி ஊராட்சி செயலாளர் ராமையன் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மங்கதேவன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்த்திகேயன் தலைமை வகித்தார். கிராமத்தினர் சார்பில் சுமார் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பாலான பீரோ, புத்தகம், தொலைகாட்சிபெட்டி, சேர், வாளி உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருட்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கிராமத்தினர், ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : education college ,Ponnanavady , Mattupetty, Government Primary School, kalvicir
× RELATED பள்ளிக்காலத்திலேயே புத்தகம்...