×

நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக வேட்பாளராக சின்ராஜ் அறிவிப்பு

ஈரோடு. நாமக்கல் கொமதேக வேட்பாளராக அக்கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் சின்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  கொமதேக நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.  நாமக்கல் தொகுதியில் கொமதேக  வேட்பாளர் தேர்வு  செய்வதற்காக ஈரோடு திண்டலில்  ஆட்சிமன்றக்குழு  கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: நடைபெறவுள்ள மக்களவை  தேர்தலில் திமுக  தலைமையிலான கூட்டணியில் கொமதேகவிற்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த  தொகுதி வேட்பாளராக சின்ராஜை தேர்வு செய்துள்ளோம். வேட்பாளர் சின்ராஜ்  நாமக்கல் மாவட்டத்தில்  கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தமிழ்நாடு  பவுல்ட்ரி அசோசியேசன் தலைவராக  இருக்கிறார். நாமக்கல் தொகுதி  மட்டுமல்லாது  தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், பாண்டிச்சேரியில் உள்ள  ஒரு தொகுதி என 40  தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற  செய்து  டெல்லியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம். இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sinaraj ,announcement ,nominee ,constituency ,Lok Sabha , Namakkal, Lok Sabha, Cinraj,
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...