மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு

மாலே: மாலத்தீவு சென்றுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு உள்துறை அமைச்சர் இம்ரான் அப்துல்லாவை சந்தித்து பேசினார். மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். அதன் பின்னர் இந்தியா சார்பில் முதல் முறையாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவு சென்றார். முதல் நாளன்று  அமைச்சர் சுஷ்மா அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா சாகித்தை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் இம்ரான் அப்துல்லாவையும் சுஷ்மா சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு சுஷ்மாவுடன் சென்றிருந்தது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் டிவிட்டர் பதிவில், “மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது மாலத்தீவு பயணத்தின் 2வது நாள்  நிகழ்ச்சியில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் இம்ரானை சந்தித்து பேசினார். இருநாட்டு உறவையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது”  என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சுஷ்மா சுவராஜூக்கு ஆளுநர் பதவி?