×

மெஸ்ஸி ஹாட்ரிக் அசத்தலில் பெட்டிசை வீழ்த்தியது பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில், பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை  வீழ்த்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் (18வது, 45’+2, 85வது நிமிடம்). லா லிகா தொடரில் இது அவரது  33வது ஹாட்ரிக் ஆகும். லூயிஸ் சுவாரெஸ் 63வது நிமிடத்தில் கோல் போட்டார். ரியல் பெட்டிஸ் சார்பில் மோரோன் 82வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.  முதல்கட்ட லீக் ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு பார்சிலோனா பழிதீர்த்துக் கொண்டது. அனைத்து அணிகளும்  தலா 28 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில், பார்சிலோனா 66 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் (56), ரியல் மாட்ரிட்  (54), ஜெடாபி (46) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barcelona ,Betsey ,hat-trick ,Messi , Messi hatrick, Barcelona
× RELATED ராயுடு இல்லாதது பின்னடைவு தான்...தோனி புலம்பல்