×

வீடு வீடாக தாம்பூலம் ஐஸ் வைத்த கலெக்டர்

தாம்பரம் பகுதியில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா 100 சதவீதம் அனைத்து பொதுமக்களும் ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம்  பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வெற்றிலை, பாக்கு, பூ ஆகியவற்றுடன் தேர்தல் அழைப்பிதழ் அடங்கிய தாம்பூல தட்டை வைத்து வருகின்ற மக்களவை தேர்தலில் 100  சதவீதம் அனைத்து பொதுமக்களும் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘’காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக தமிழ் மரபுப்படி மகளிர்  சுய உதவிக்குழுக்கள் மற்றும் அதிகாரிகள் வாயிலாக வீடுகள் தோறும் வெற்றிலை, பாக்கு, பூ ஆகியவற்றுடன் தேர்தல் அழைப்பிதழ் அடங்கிய தாம்பூல தட்டை வைத்து 100 சதவீதம் அனைத்து பொதுமக்களும் ஓட்டளிக்க  வருமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றோம்.இந்த அழைப்பிதழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுய உதவிக்குழுக்கள் மூலமும், அரசு அலுவலர்கள் மூலமும் வழங்கப்படும். அதன் மூலம் 100 சதவீத ஓட்டளிப்பை உறுதி செய்யமுடியும்”  என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : House, housing, ,ice, Collector
× RELATED ஆந்திராவில் பரபரப்பாக மாறும் அரசியல்...