×

நாடு முன்னேற வேண்டும் என்றால் புதிய கூட்டாட்சி அமைக்க வேண்டும்: சந்திரசேகர ராவ் கருத்து

ஐதராபாத்: சர்வதேச அளவில் இந்தியா முன்னேற வேண்டும் என்றால், பாஜ, காங்கிரஸ் அல்லாத, புதிய கூட்டாட்சி ஏற்பட வேண்டும்’’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது தேர்தல் பிரசாத்தை கரீம்நகரில் நேற்று முன்தினம் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:நம் நாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளுக்கு இணையாக முன்னேற வேண்டும் என்றால், பாஜ, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் இருக்கக்கூடாது. அப்போது நம் நாட்டில் மாற்று கூட்டாட்சி அரசியல் வரும். மாநில கட்சிகள்  இந்த நாட்டை ஆள வேண்டும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற பாஜ, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தவறிவிட்டன. சுமார் 100 முதல் 150 எம்.பிக்களை ஒன்றிணைத்து நாட்டின் அரசியலை தெலங்கானா மாற்ற  வேண்டும். சுதந்திரம் பெற்றதில் இருந்து காங்கிரசும், பா.ஜ.வும் ஆட்சியில் இருந்துள்ளன. ஆனால் நாடு போதிய அளவு முன்னேறவில்லை.

நாட்டுக்கு 70 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. மின் உற்பத்தி நிலையங்கள் முறையாக பயன்படுத்தப் படவில்லை. நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் பல  சீர்திருத்தங்கள் தேவை. தேவைப்பட்டால் தேசிய கட்சியை ஏற்படுத்தி, நாட்டை ஒன்றிணைப்பேன். நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதில் நான் முக்கிய பங்காற்றுவேன். நாட்டை இயங்கச் செய்யும் 6 முதல் 7 மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,Chandrasekara Rao , country , progress, New federal, Chandrasekhara Rao ,concept
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!