×

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு: எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு விருதுநகர், சென்னை வடக்கு, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்  தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ விருதுநகர் தொகுதியில் ஆர்.அழகர்சாமி(தேமுதிக விசாரணை குழு உறுப்பினர்), சென்னை வடக்கு- அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்(தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர்,  முன்னாள் எம்எல்ஏ), திருச்சிராப்பள்ளி- டாக்டர் வி.இளங்கோவன்(தேமுதிக அவைத்தலைவர்), கள்ளக்குறிச்சி- எல்.கே.சுதீஷ்(தேமுதிக துணை செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர்) போட்டியிடுவார்கள்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.கே.சுதீஷ்:  கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ்(52) பிஏ பட்டதாரி. இவருக்கு பூரணஜோதி என்ற மனைவியும், ஜானு, கீர்த்னா என்ற மகளும் உள்ளனர்.  இவர் கடந்த 2006ம் ஆண்டு குடியாத்தம் சட்டமன்ற  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியிலும், தொடர்ந்து 2014ம் ஆண்டு சேலம் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு  வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்.கே.சுதீஷ் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் தம்பி ஆவார்.

அழகாபுரம் மோகன்ராஜ்: வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்(66) பிஎஸ்சி பட்டதாரி. இவருக்கு உண்ணாமலை என்ற மனைவியும், பிரியதர்சினி, பிருந்தா என்ற மகளும், பிரஜேஷ் என்ற மகனும்  உள்ளனர். மோகன்ராஜ் சேலம் மாவட்ட தேமுதிக பொருளாளர், மாவட்ட செயலாளராக பதவி வகித்து உள்ளார். 2009ம் ஆண்டு சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். 2011ம் தேதி சேலம்  வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,elections ,Lok Sabha ,LK Sudesh , Lok Sabha ,elections, DMK candidates,, LK Sudesh
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...