×

138 கிராம் தங்கம் கேட்டு லாட்ஜில் அடைத்து சித்ரவதை மலேசியாவில் இருந்து சென்னை வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை:  கடலூர் மாவட்டம் பன்ரூட்டி அருகே உள்ள அரசடிகுப்பத்தை சேர்ந்த சிவகுமார்(42) நேற்று முன்தினம் அதிகாலை மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் 3 பேருடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். உடன் வந்த 3 பேர் நள்ளிரவு வரை இருந்துவிட்டு சென்றுவிட்டனர். பிறகு நேற்று காலை 3 பேரும் லாட்ஜிக்கு வந்து சிவகுமாரை பார்க்க வந்துள்ளனர். அப்போது அறையில் இருந்து சிவகுமார் வெகு நேரமாக கதைவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, சிவகுமார் மின் விசிறியில் தூக்கிட்டு தற்ெகாலை ெசய்து கொண்டது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து லாட்ஜ் மேலாளர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:  உயிரிழந்த சிவகுமார் ஏஜென்சி மூலம் மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியில் சேர்ந்துள்ளார். அங்கு பணியின் போது இவரது ஒரு கை துண்டானது. இதனால் அவர் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு ெசய்தார். இது குறித்து தகவல் அறிந்த சாதிக் என்பவர் சிவகுமாரை சந்தித்து 138 கிராம் செயினை சென்னையில் உள்ள தனது நண்பர்கள் அஜ்மல், பைசல், தங்கராஜ் ஆகியோரிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர். அதற்காக பணமும் சிவகுமாருக்கு சாதிக் கொடுத்துள்ளார்.
அதன்படி சிவகுமார் 138 கிராம் தங்க ெசயினை எடுத்து கொண்டு மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

 அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் சிவகுமாரை சோதனை செய்து138 கிராம் தங்க செயின் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களிடம் தங்க செயினை கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஞாயிற்று கிழமை அதிகாலை சென்னை வந்த சிவகுமாரை விமான நிலையத்தில் அஜ்மல், பைசல், தங்கராஜ் ஆகியோர் சந்தித்து சாதிக் கொடுத்து அனுப்பிய 138 கிராம் தங்க செயினை கேட்டுள்ளனர். அதற்கு சிவகுமார் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அதை மூன்று பேரும் ஏற்கவில்லை. உடனே சிவகுமாரை தங்கத்தை விழுங்கி விட்டு எங்களை ஏமாற்றுகிறாயா என்று, உன்னை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறி திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு சிவகுமாரை கடுமையாக தாக்கி தங்கம் குறித்து கேட்டுள்ளனர்.

ஆனால் சிவகுமார் சொன்ன பதிலையே திரும்ப திரும்ப கூறி வந்ததால் கடுமையாக மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த சிவகுமார் 3பேரும் அறையில் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து சிவகுமாரை கடத்தி வந்து லாட்ஜில் அடைத்து சித்ரவதை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு ெசய்து அஜ்மல் மற்றும் பைசல் ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். தலைமறைவாக உள்ள தங்கராஜை போலீசார்  தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicides ,Malaysia , Gold, Malaysia, Chennai, Thrown and suicide
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...