×

தெலுங்கு தேசத்தின் ‘பி டீம்’ ஜனசேனா?

திரை உலகில் இருந்து அரசியல் களத்தில் குதித்துள்ள பவன் கல்யாண், ஜன சேனா என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். ஆனால், இக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவதற்காக ஆரம்பிக்கப்படவில்லை என்றும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் ‘பி’ டீம் ஆக செயல்படவே ஆரம்பித்துள்ளனர் என்றும் கூறுகின்றனர் அரசியல் அறிந்தவர்கள். சமீபத்தில் நடந்த பல நிகழ்வுகள் இதை உண்மை என்றே நிரூபிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பவன் கல்யாண் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதைப்பற்றியும் தெலுங்கு தேசத்தை நோக்கி இதுவரையில் கேள்வி எதையும் எழுப்பியது இல்லை. போகிற போக்கில் கடந்த ஆண்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நர லோகேஷ் ஆகியோர் ஊழல் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பினார்.

அதேவேளையில் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பல்வேறு போராட்டங்களை அறிவித்து அரங்கேற்றியது. அந்த சமயத்தில் மக்கள் கவனத்தை திசை திருப்பி சந்திரபாபு நாயுடு அரசை பாதுகாக்கும் செயலில் பவன் கல்யாண் ஈடுபட்டார் என்கின்றனர். இரு கட்சிகளைச் சேர்ந்த இரண்டாம் நிலை தலைவர்கள் கூறுகையில், சந்திரபாபு நாயுடுவும் பவன் கல்யாணும் ரகசிய உடன்பாடு செய்துள்ளனர். அதன்படி, சந்திரபாபு நாயுடு யோசனை மற்றும் உத்தரவுப்படியே பவன் கல்யாண் ஆந்திர அரசியலில் காய்களை நகர்த்தி வருகிறார் என்கின்றனர்.  ஜன சேனா கட்சியின் தலைவராக பவன் கல்யாண் இருந்தாலும், சந்திரபாபு நாயுடு ஆட்டுவிக்கும் பொம்மையாக செயல்படுகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

லட்சுமி நாராயணாவை இயக்குவது யார்?
ஆந்திராவில், சிபிஐ முன்னாள் இணை இயக்குநர்  விவி லட்சுமிநாராயணா ஜன சேனாவில் சேர்ந்ததும் சந்திரபாபு நாயுடுவின் கண் அசைவில்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முன்னதாக, லட்சுமி நாராயணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேர்வதாகதான் பேச்சு அடிபட்டது. ஆனால், அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு நாயுடுவின் அறிவுரைப்படி ஜன சேனாவில் அவர் சேர்ந்ததாக கூறுகின்றனர். லட்சுமி நாராயணாவும் சந்திரபாபு நாயுடுவும் மிக நெருக்கமானவர்கள். முன்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகன் மோகன் விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தபோது, அவர் மீது சிபிஐ பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவருக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த வழக்குகளை எல்லாம் லட்சுமி நாராயணாதான் விசாரித்தார். முதலில் தெலுங்கு தேசத்தில் சேரப்போவதாகக் கூறப்பட்டது. அதை புறந்தள்ளிவிட்டு ஜன சேனாவில் ஐக்கியமானார் லட்சுமி நாராயணா. எல்லாம் நாயுடுவின் யோசனைப்படிதான் நடக்கிறது என்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : B Teem' Janasena ,Telugu Desam , TDP,
× RELATED ஆந்திர மாநில தேர்தலில் மதுபானம் ஆறாக...