×

4 மாதத்தில் இருந்து 39 நாளாக குறைந்த தேர்தல் திருவிழா

மக்களவை தேர்தல் நடைமுறை 1951ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தேர்தல் 1951 அக்டோபர் 25ல் தொடங்கி 1952ம் ஆண்டு பிப்ரவரி 21 வரை கிட்டத்தட்ட 4 மாதங்கள் நடந்தது. தேர்தல் 68 கட்டங்கள் நடந்தது. வாக்காளர் எண்ணிக்கை 17.32 கோடி. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 35.66 கோடி. மொத்த தொகுதிகள் 489. தேர்தலில் மொத்தம் 1849 வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். இப்போது கதையே வேறு. 130 கோடி மக்கள். கிட்டத்தட்ட 90 கோடி வாக்காளர்கள்.

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 69.23 சதவீதம் பேர் வாக்களிக்கும் தகுதி உடையவர்கள். வாக்களிக்கும் வயது தற்போது 18.  543 தொகுதிகள். 2354 அரசியல்கட்சிகள். 7 கட்ட தேர்தல். ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19 வரை. மொத்தம் 39 நாட்களில் தேர்தல் பரபரப்பு முடிந்து விடும்.  2014ல் நடந்த 16வது மக்களவை தேர்தலில் 81.45 கோடி வாக்களர்கள் இருந்தனர். இந்த தேர்தலில் 9 கோடி அதிகரித்து இருக்கிறது. 2014ல் 8251 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இந்த தேர்தலில் இன்னும் கூடலாம்.

அது அப்போ...இது இப்போ...
எண்        1951(முதல் தேர்தல்)      2019(17வது தேர்தல்)
1.    வாக்காளர்கள்    17.32கோடி       90கோடி
2.    வாக்குச்சாவடி    10,35,918    2,23,611
3.    தேர்தல் செலவு    10 கோடி                       3,870 கோடி
4.    வாக்குப்பதிவு    68 கட்டம்                       7 கட்டம்
5.    பங்கேற்ற கட்சிகள்    53                       2354 கட்சிகள் பதிவு

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival , Electoral festival
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...