×

பிரதமர் மோடி குறித்த பிஎச்டி ஆய்வு படிப்பை நிறைவு செய்தார் சூரத் மாணவர்

சூரத்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிஎச்டி ஆய்வு படிப்பை சூரத் மாணவர் நிறைவு செய்துள்ளார். வீர நர்மதா தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்து ஆராய்ச்சி படிப்பை தொடங்கிய மெகுல் சோக்சி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவ பண்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவருக்கும் நாட்டை விட்டு ஓடிய வைரவியாபாரி மெகுல் சோக்சிக்கும் பெயரை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த 2010-ம் ஆண்டு சோக் ஷி தனது ஆய்வு படிப்பை தொடங்கியிருந்தார்.

மெகுல் தனது ஆய்வில் அரசு அதிகாரிகள், விவசாயிகள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 450 பேரை சந்தித்து 32 கேள்விகள் எழுப்பி கிடைத்த பதில்களை ஆய்வு கட்டுரையாக வீர நர்மதா தெற்கு குஜராத் பல்கலைக் கழகத்துக்கு சமர்பித்துள்ளார். அதில், 25% பேர் மோடியின் உரை தங்களை கவர்ந்ததாக தெரிவித்துள்ளனர். அத்துடன் 48% பேர் மோடியின் அரசியலை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,Surat , Prime Minister Modi, PhD study study, Surat student
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...