×

கொள்ளிடம் அருகே 6 ஆண்டுகளாக குடிநீரின்றி 200 குடும்பங்கள் தவிப்பு : 3 கி.மீ தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் அவலம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக குடிநீரின்றி தவிக்கும் 200 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியை சேர்ந்த சின்னத்தெருவில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில வருடங்களாக நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டதால் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டதால் ஊராட்சியின் மூலம் கைபம்பு  அடித்து கொடுப்பது நிறுத்தப்பட்டதால் நிலத்தடி  நீரை எடுக்கும் முயற்சியும் நிறுத்தப்பட்டு விட்டது. இங்குள்ளவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. குடிநீர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 3 கி.மீ தூரம் நடந்தும், சைக்கிளில் சென்றும் கொப்பியம் கிராமத்திலிருந்து பிளாஸ்டிக் குடங்களிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். கொப்பியத்தில் உள்ள சில கைபம்புகளிலிருந்து வரும் நிலத்தடி நீரை காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் எடுத்து வருவதெற்கென்றே மணிக்கணக்கில் பலரும் நேரத்தை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து ஆலாலசுந்தரம் சின்ன தெருவைச் சேர்ந்த கலைவேந்தன் கூறுகையில், ஆலாலசுந்தரம் சின்ன தெருவில் இருந்து வந்த ஒரு கைபம்பில் பயனற்ற காவி நிறம் கலந்த  உவர் நீர் வந்தது. அதையும்  சிலர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்த ஒரு கைபம்பும் கடந்த ஒரு மாதமாக செயல்படவில்லை. இது குறித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓவிடம் 50 பேருடன் சென்று குடிநீர்க் கேட்டு மனு கொடுத்தோம். செவிடன் காதில் ஊதிய சங்காக இது வரை யாரும் கண்டு கொள்ளவில்லை. வெயில் காலம் என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உடனே தண்ணீருக்கு தீர்வு காணவில்லை என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலை எங்கள் தெருவைச் சேர்ந்த அனைத்து குடும்பத்தினரும் புறக்கணிப்போம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,cottage , kollidam,family,water
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...