×

கஜா புயல் தாக்கிய 120 நாட்களுக்கு பின் சேதுபாவாசத்திரத்தில் இருந்து 28 விசைப்படகு கடலுக்கு சென்றது

சேதுபாவாசத்திரம்: கஜா புயல் தாக்கிய 120 நாட்களுக்கு பின்னர் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினத்திலிருந்து 28 படகுகள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்காததால் 188 விசைப்படகு மீனவர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதியில் 247 விசைப்படகுகள் இருந்தன. கடந்த நவம்பர் மாத கோரத்தாண்டவமாடிய கஜா புயலில் 54 படகுகள் பகுதி சேதமடைந்தன.

188 படகுகள் முழுமையாக சேதமடைந்தது. பகுதி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.13 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது. பகுதி சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் சில விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக செலவான தொகையை தங்கள் கையில் உள்ள பணத்தை போட்டு படகுகளை பழுதுநீக்கி கடலுக்கு தொழிலுக்கு செல்ல தயார் செய்துவிட்டனர்.

இந்நிலையில் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஒரு மாதமாக 7 விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடி தொழில் செய்து வந்தது. இந்நிலையில் 120 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் இருந்து 25 விசைப்படகு, மல்லிப்பட்டினத்தில் இருந்து கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

முழுமையாக சேதமடைந்த 188 விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. அரசு அறிவித்த நிவாரணத்தில் பழைய படகுகூட வாங்க முடியாது. புதிய படகு வாங்க ரூ.30 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இழப்பீட்டுத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் நிவாரணம் உயர்த்தி வழங்கவில்லை. நிவாரணம் வழங்கப்படாததால் விசைப்படகுகளை சரி செய்ய முடியவில்லை. இதனால் இதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், மீனவ தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Gaza Storm , Kaja storm, cetupavacattiram, boat
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு