சிவகாசி: சிவகாசியில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் தர்பூசணி, சாலையோரக் கடைகளில் கிலோ ரூ.16க்கு விற்பனை செய்கிறது. சிவகாசி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் வெப்பச் சலனம் ஏற்பட்டது. பனி குறைந்து மாலையில் வெப்பக்காற்று வீசத்தொடங்கியது. காலை 6 மணிக்கெல்லாம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் நேரங்களில் அதிக புழுக்கம் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், கடைகளில் குளிர்பான விற்பனை அதிகரித்து வருகிறது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து தர்பூசணி கொண்டு வரப்பட்டு சிவகாசி பகுதியில் விற்பனை செய்கின்றனர். மக்களும் வெயிலின் தாக்கத்தை குறைக்க விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். நகரில் உள்ள முக்கியச் சாலைகள், பஜார் பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைத்து தர்பூசணி விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ தர்பூசணி ரூ.16 வரை விற்கப்படுகிறது. இதுதவிர நுங்குபதநீர் ரூ.20க்கு விற்கின்றனர். இது உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை உருவாக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையோர கடைகளில் விரும்பி வாங்கி குடிக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
